Monday, December 9, 2013

ஆஷஷ் : இரண்டாவது போட்டியிலும் ஆஸி. வெற்றி...

அவுஸ்­தி­ரே­லிய அணியின் அபார பந்து வீச்சில் தடு­மாறிய இங்­கி­லாந்து அணி இரண்டாவது போட்டியையும் ஆஸியிடம் பறிகொடுத்து 218 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
531 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி போராடிய இங்­கி­லாந்து அணி 4 விக்­கெட்­டுக்­கள் கைவ­ச­மி­ருக்க 5 ஆவதும் இறுதி நாளு­மான இன்று 284 ஓட்­டங்­களைப் பெற­வேண்­டிய கட்­டா­யத்­துக்குள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
 

 
இங்­கி­லாந்தின் துடுப்­பாட்ட வீரர்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக விளங்கும் ஆஸி. அணியின் பந்து வீச்சாலும் பல­மான களத்­த­டுப்பாலும் அந்த இலக்கை இங்­கி­லாந்து அணியினால் அடைய முடியாது போனது.
நேற்­றைய 4 ஆம் நாள் ஆட்­ட­நேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 247 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த இங்கிலாந்து அணி இன்றைய ஐந்தாவதும் இறுதிநாளுமான ஆட்டத்தில் மிகுதி 4 விக்கெட்டுக்களையும் 65 ஓட்டங்களை பெறுவதற்குள் இழந்து, 218 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 
அவுஸ்­தி­ரே­லிய- இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான வர­லாற்று சிறப்பு மிக்க குளிர்­கால ஆஷஷ் தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி அடி­லெய்டில் நடை­பெற்றது.
இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி அணி 9 விக்கெட் இழப்­பிற்கு 570 ஓட்­டங்­க­ளுடன் தனது முதல் இனிங்ஸை இடை­நி­றுத்த, இங்­கி­லாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 172 ஓட்­டங்­க­ளுக்குள் சுருண்­டது.
இதில் அபா­ர­மாக பந்து வீசிய ஆஸி. அணியின் மிட்சல் ஜோன்சன் 7 விக்­கெட்­டுக்­களை பதம் பார்த்தார்.
 
இத­னை­ய­டுத்து போட்­டியின் 3 ஆவது நாள் மாலை நேர தேநீர் இடை­வே­ளை­யின் பின் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்­பித்த ஆஸி. அணி 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 132 ஓட்­டங்­க­ளைப்­பெற்ற போது ஆட்­ட­நேரம் முடி­வுக்கு வந்­தது.
இந்­நி­லையில் போட்­டியின் 4 ஆவது நாள் தனது 2 ஆவது இனிங்ஸை தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி. அணி 3 விக்கெட் இழப்­பிற்கு 132 ஓட்­டங்­க­ளு­ட­னேயே ஆட்டத்தை இடை­நி­றுத்­தி­யது.
 
இத­னை­ய­டுத்து 531 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட பதி­லுக்கு தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்­பித்த இங்­கி­லாந்து அணி ஒரு ஓட்­டத்­தைப்­பெ­று­வ­தற்குள் முத­லா­வது விக்­கெட்­டைப்­ ப­றி­கொ­டுத்து ஆரம்பமே தடுமாறி நேற்றையநாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
 
போட்டியின் 5 ஆவதும் இறுதி நாளுமான இன்றைய ஆட்டத்தில் மிகுதி 4 விக்கெட்டுக்களையும் 65 ஓட்டங்களை பெறுவதற்குள் இழந்து, 218 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இப் போட்டியில் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் மிட்சல் ஜோண்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவதும் முக்கியமானதுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி பேர்த்தில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment